இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திற்கான 2026-2027 கல்வி யாண்டு பள்ளி மாணவ, மாணவியருக் கான குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் கமுதி கோட்டைமேடு ரஹ்மானியா கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கின.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வர் தீபா ஜாஸ்மின் தலைமை வகித்தார். பள்ளியின் ஒருங்கிணைப் பாளர் எம். முத்துப்பாண்டி வரவேற் புரை ஆற்றினார். பள்ளியின் நிர்வா கக்குழு அதிகாரி ஏ. முகமது இர்ஷாத்போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவர்கள் விளையாட்டிலும் கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் எம். கருப்பசாமி செய் திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் கமுதி வட்டார உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *