தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் மேற்கு ஒன்றிய திமுககழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
குண்டடம்,
திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குண்டடம் மேற்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குண்டடம் அருகே அமைந்துள்ள ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் நந்தவனம் பாளையம் மற்றும் சடைய பாளையம் ஊராட்சி திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாதன் தலைமை வகித்தார். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மு.பெ. சாமிநாதன் முன்னிலைவகித்தார்.
மகளிர் அணி மாநில துணை அமைப்பாளர் என்.
கயல்விழிசெல்வராஜ்,தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். சந்திரசேகர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தி.மு.க.வின் வளர்ச்சிப் பணிகள், பூத்வாரியான அமைப்பு வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை, அரசின் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு பூத் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.