தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திச்சுனை மூலக்கடை ஊராட்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கால்நடை துணை நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ் எம் பி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார் . மேலும் அந்த ஊராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.