தென்காசி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி – வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கி பாராட்டு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி மாவட்டம் சார்பில் கடையம் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் ‘துளிர்’ வினாடி வினா போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு கடையம் வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார். நடுநிலை மற்றும் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி பிரிவுகளில் தனித்தனியாக வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

நடுநிலைப் பள்ளிகள் – தமிழ் வழி:

முதலிடம்: ஸ்ரீ ராம நாராயண நாடார் நடுநிலைப்பள்ளி, புங்கம்பட்டி – சஞ்ஜினி, அஜய்

இரண்டாம் இடம்: வீர உலகம்மாள் நடுநிலைப்பள்ளி, செக்கடியூர் – தீபாஷினி, சூரிய ஹர்ஷினி

மூன்றாம் இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரவணசமுத்திரம் – எஸ். சுபாஷினி, ஏ. சுபாஷினி

நடுநிலைப் பள்ளிகள் – ஆங்கில வழி:

முதலிடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரவணசமுத்திரம் – ஹரிதேவி, முகிலா, சௌ. பிரதீப்

தொடக்கநிலைப் பள்ளிகள் – தமிழ் வழி:

முதலிடம்: என். கார்த்திகேயன் – ஸ்ரீ ராம நாராயண நாடார் நடுநிலைப்பள்ளி, புங்கம்பட்டி

இரண்டாம் இடம்: நிபாசினி – ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மணல் காட்டானூர்

மூன்றாம் இடம்: ஆர். லக்ஷித் குமார் – டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி, கோவிலூற்று

தொடக்கநிலைப் பள்ளிகள் – ஆங்கில வழி:

முதலிடம்: வெ. செல்வ சிவஸ்ரீ – ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கட்டேறிபட்டி

இரண்டாம் இடம்: எஸ். சாயிரா – ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கல்யாணிபுரம்

மூன்றாம் இடம்: மு. அர்ஷியா – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரவணசமுத்திரம்

போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஆசிரியர்கள் நமச்சிவாயம், சாரா அந்தோணி ராஜ், சந்திரன், தெய்வராஜ், ஜோசப் தேசிங்கு ராஜா ஆகியோரும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

வினாடி வினா நிகழ்ச்சியை கவிதா, கிருஷ்ண பொன் ஜோதி மற்றும் ஷமீமா ஆகியோர் திறம்பட ஒருங்கிணைத்து நடத்தினர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இந்த முயற்சி, மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, பொது அறிவு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *