குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பேருந்து நிலையம் அருகே, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குண்டடம் வட்டாரத் தலைவர் எஸ்.என். ரத்தினசாமி, நகரத் தலைவர் வி. கோபாலகிருஷ்ணன், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு ஒன்றியத் தலைவர் முத்து வடுகநாதன், ருத்ராவதி பேரூராட்சி செயலாளர் தாமரைச்செல்வன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், குண்டடம் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் நந்தகுமார், இணை அமைப்பாளர் குமார், தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *