மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்

தென்காசி ஜூலை 17-

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் பேரவைத் தேர்தல் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இத்தேர்தல் கல்லூரிச் செயலர் டி.எஸ்.ரோஜாலிகமதா தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் சு.மகாலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் இளநிலை/இளங்கலை இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு பயிலும் மாணவியர்கள், முதுநிலை/முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவியர்கள் என மொத்தம் 1071 மாணவியர்களும், சுயநிதிப் பிரிவில் 573 மாணவியர்களும் கணினியின் மூலம் தங்களது வாக்குகளை நேரடியாகப் பதிவு செய்தனர்.


தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்ற மாணவியர்களின் பெயர்களை கல்லூரி முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்:
பேரவைத் தலைவர்: எம்.ஜெயஸ்ரீ (கணிணித் துறை, மூன்றாமாண்டு)
துணைத்தலைவர். எம்.சரண்யா (முதுகலைத் தமிழ், இரண்டாமாண்டு)
மாணவர் பேரவைச் செயலாளர். டி.ராக்கேல் (தமிழ் இளங்கலை, மூன்றாமாண்டு)
இணைச்செயலாளர். ஆர்.முகிலா (வரலாற்றுத்துறை இளங்கலை, மூன்றாமாண்டு)
நுண்கலைச் செயலாளர் ஆர்.மாரியம்மாள் (தமிழ்த்துறை இளங்கலை, மூன்றாமாண்டு)
இலக்கியமன்றச் செயலாளர். எஸ்.தாஹிராள் (பொருளாதாரத்துறை இளங்கலை, மூன்றாமாண்டு)
கல்லூரி ஆண்டு விழா மலர்ச் செயலாளர். பி.சந்தனமாரி (வரலாற்றுத்துறை இளங்கலை, மூன்றாமாண்டு)சுயநிதிப்பிரிவுச் செயலாளர். எம்.சூர்யபிரபா (கணிணித்துறை, மூன்றாமாண்டு)
சுயநிதிப்பிரிவுத் துணைச் செயலாளர். பி.நிஹர் சுல்தானா (வணிகவியல் துறை முதுகலை, இரண்டாமாண்டு)தேர்தலில் வெற்றி பெற்று புதிய பொறுப்புகளை ஏற்கும் மாணவியருக்கு கல்லூரிச் செயலர், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்

இம்மாணவர் பேரவைத் தேர்தலை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.இசக்கியம்மாள் மற்றும் குழு உறுப்பினர்களான பேராசிரியர்கள் முனைவர் சு.பார்வதி, முனைவர் எம்.ஆர்.கே.ஹேமலதா, முனைவர் டி.சாவித்திரி, முனைவர் ப.தங்கத்துரைச்சி, முனைவர் பி.சித்ராதேவி, முனைவர் ஆர்.ரெஜிக்கண்ணா, முனைவர் வி.பவுண்முனியம்மாள், எஸ்.பிரபா, முனைவர் பி.முத்துலட்சுமி, முனைவர் கே.செல்வராணி, முனைவர் இ.மகேஸ்வரி, முனைவர் எஸ்.மகாதேவி, எம்.கலைச்செல்வி, எம்.அனுசுயா, முனைவர் என்.சிவகாமி, பி.அமுதா, கே.வெங்கடேஸ்வரி மற்றும் முனைவர் ஜே.சுபாசினி ஆகியோர் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *