சமயநல்லூர்.
சமயநல்லூரில் சோழவந்தான் தொகுதி மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் மலையாளம், தலைமையில்
சிறப்பு அழைப்பாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அவர் பேசியது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினோம் இருந்தாலும் பரவாயில்லை நமக்காக தொடர்ந்து உழைக்க ஆணிவேராக கிளைக் கழகச் செயலாளர்களும் கடைக்கோடி தொண்டனாக இருக்கும் அதிமுக உறுப்பினர்களும் இருக்கும் வரை நாம் தொடர்ந்து மக்கள் பணி செய்வோம் முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப்விஜய் உண்மையில் அவர் முதல்வராக பதவியேற்று உள்ளாரா என்று என்னால் இதுவரை நம்ப முடியவில்லை நமது குழந்தைகளின் கணினி உலகத்தை வைத்து யாரும் எதிர்பாராத விதமாக வந்துவிட்டார்108 இடங்கள் மட்டும் அவருக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் ஆனால் மெஜாரிட்டிக்கு இன்னும் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை அதனால் நமதுகட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து அவர்களை இப்போது நடுத்தெருவில் விட்டு விட்டார் அவர் எண்ணியது ஒன்று இப்போது நடப்பது ஒன்றாக உள்ளது அதிமுகவில் இருந்து தவெகக்காவுக்கு
சென்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்
இடைத்தேர்தலில் அந்தத் தொகுதியிலேயே சீட்டு வாங்கி வெற்றி பெற்று அமைச்சராகி சம்பாதித்துக் கொள்ளலாம் என கனவு கண்டு கொண்டு இருந்த அவர்கள் எண்ணத்தில் பேரிடி விழுந்தது இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று கோர்ட் கூறியதால் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அனைவரும் இப்போது வீதிக்கு வந்து விட்டனர் சட்டமன்றத்தில் கொக்கரித்து பேசும் முதல்வர் விஜய் செயல்பாட்டில்துளி அளவும் மக்களுக்கு செய்யவில்லை முதல்வர் எங்கு சென்றாலும் அவர் கட்சிக்காரர்கள் வீடியோ எடுத்து போடுகின்றனர் குடை பிடித்து செல்கிறார் சட்டமன்றத்தில் உட்கார்ந்து டிபன் பாக்ஸ் எடுத்து வந்து சாப்பிடுகிறார்என்று கூறுகிறார்கள் ஆனால் எங்களின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதிய வேளையில் சாப்பிடும் போது அருகில் கட்சிக்காரர்கள் யார் இருந்தாலும் அவர்களுக்கும் தனக்கு என்ன சாப்பாடு வழங்கியுள்ளனர் அதே சாப்பாடு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட ஒரு உத்தம முதல்வர் மற்றும் தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது புயல் மற்றும் வெள்ள காலங்களில் வேட்டியை மடுத்து கட்டிக்கொண்டு ஒரு கையில் குடையுடன் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று மக்களுக்கு உதவி செய்த ஒரு ஒப்பற்ற முதல்வர் எடப்பாடியார்கொரோனா காலகட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு ஓடோடி உதவி செய்த ஒப்பற்ற ஒரு உத்தமர் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி வழியில் வந்த எங்களின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி தான் விரைவில் இந்த விஜயின் பொம்மலாட்டம் ஆட்சி முடிவுக்கு வரும் அப்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார்.இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், திருப்பதி,ராகுல்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், மகேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி, பொதும்புமுன்னாள்
கூட்டுறவு தலைவர் மலர்கண்ணன்,
எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் முடுவார்பட்டி
ஜெயச்சந்திரமணியன்அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர்
ஆர்.பி.குமார்,
முத்துகிருஷ்ணன், தொழிலதிபர் மகாராஜன்,
தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ரகுபூபதி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அம்முலோகேஸ்வரன்,மற்றும் தங்கம்,சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.