கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் CAPI 2026 (Conclave of Advanced Pulmonary Interventions) எனும் மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா, மேம்பட்ட நுரையீரல் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பட்டாபி ராமன், அர்ஜூன் மற்றும் மகாதேவன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது..

இதில், ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இரு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நுரையீரல் மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டு,.நுரையீரல் மற்றும் ப்ளூரா தொடர்பான நவீன சிகிச்சை முறைகள், புதிய தொழில்நுட்பங்கள், சவாலான நோய்களுக்கான தலையீட்டு சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கவுரையாற்றுகின்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மாதேஸ்வரன், இதுபோன்ற கருத்தரங்குகள் இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்களையும், மேம்பட்ட நுரையீரல் தலையீட்டு சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

மேலும், தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருவதால் நுரையீரல் தொடர்பான நோய்களும் கணிசமாக உயர்ந்து வருவது உண்மை என்றும், காற்று மாசுபாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதரின் சமூகப் பொறுப்பும் ஆகும் என அவர் வலியுறுத்தினார்…

துவக்க விழாவில்,ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி, தலைமை செயல்பாட்டு அலுவலர் (COO) மணி செந்தில் குமார், மூத்த பொது மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *