கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ் துறை ஒரு நாள் கருத்தரங்கம்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ் துறையின் சார்பில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர் கம்பம் என்.இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் என்.எம்.ஆர்.வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா முன்னிலையில் தமிழ் துறை ஒரு நாள் ஆய்வரங்கம் நடைபெற்றது
தமிழ் துறை தலைவர் அ.ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா பேசும் போது பழங்கற்கால மக்களின் வாழ்க்கை முறையில் தொல்லியல் மற்றும் சிற்பக்கலைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியின் வரலாற்று துறை இணைப் பேராசிரியர் முனைவர் சி. மாணிக்கராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும் போது பெருங்கற்கால பண்பாடு என்ற தலைப்பில் பெருங்கற்கால காலக் கணிப்பு பரவல் முறை மக்கள் வாழ்க்கை முறை கல்வெட்டை கல்பதுக்கை கல்வட்டம் தொல் பழங்கால பிரிவு புதை கற்கள் போன்ற செய்திகளை மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி பேசினார்
தேனி ஜந்தினை இலக்கிய தளத்தின் தலைவர் இதயநிலவன் துணைச் செயலாளர் கவிஞர் சர்ஜிலா பர்வின் பொருளாளர் பெ. முருகேசன் கரூர் தடம் ஒருங்கிணைப்பாளர் பூமணராஜா கம்பம் அரசு கால்நடை மருத்துவர் க. செல்வம் மற்றும் கூடலூர் அரசு மருத்துவர் பூர்ணிமா கணநாதன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார்கள் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க.சுதா நன்றி கூறினார் இந்த நிகழ்ச்சியில் தமிழ் துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவிகள் அனைவரும் பங்கேற்று நம் தாய்மொழி தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி அறிந்து புரிந்து பயனடைந்தனர்