கோவை கணபதியில் உள்ள இ.வி.எம். நிசான் விற்பனை மையத்தில், நிசான் நிறுவனத்தின் புதிய “டெக்டன்” கார் அறிமுக விழா நடைபெற்றது.

தமிழ்நாடு இ.வி.எம். நிசான் விற்பனை பொது மேலாளர் சபரி நாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், புதிய நிசான் டெக்டன் காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்து, முதல் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு வசதிகள், நவீன வடிவமைப்பு, சக்திவாய்ந்த செயல்திறன், எரிபொருள் சிக்கனம், பயணிகளின் வசதிக்கான மேம்பட்ட உள்புற அமைப்பு, டிஜிட்டல் இணைப்பு வசதிகள் மற்றும் சமகால தொழில்நுட்பங்கள் குறித்து விற்பனை மேலாளர்கள் பிரசாந்த் மற்றும் கணேஷ் விரிவாக விளக்கமளித்தனர்.

மேலும், நகர்ப்புற மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல், பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் புதிய தரத்தை உருவாக்கும் எனவும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நவீன அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் புதிய வாகனத்தை நேரில் பார்வையிட்டு அதன் சிறப்பம்சங்களை அறிந்து கொண்டதுடன், சோதனை ஓட்டத்திலும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிசான் நிறுவனத்தின் புதிய “டெக்டன்” கார் அறிமுகம் கோவை வாகன சந்தையில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கருத்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *