புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.‌ இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், வரும் 16ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் இறுதி நாளாகும்.

இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேது செல்வம் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். புதுப்பேட்டை புத்துலாய் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்த பின், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில், வேட்பாளர் சேது செல்வம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சார தொடக்க நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி, அ. தைரியநாதன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், விக்னேஷ் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ந. தங்கவேலு, தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், கோ. தியாகராஜன், செ.நடராஜன், ஆறுமுகம், அணி அமைப்பாளர்கள் செந்தில் முருகன், காயத்ரி, டாக்டர் ஆனந்த ஆரோக்கியராஜ், துணைத் தலைவர்கள் குரு, நவீன், துணை அமைப்பாளர்கள் தேவேந்திரன், கிருபா சங்கர், சிவதாஸ், சசிகுமார், நடராஜன்,
அஜய் பாரத், முத்து, பாலசுப்பிரமணியன், சுரேஷ், பால்ராஜ், சுரேஷ், தமிழ் மொழி, பிச்சாண்டி, ராஜா,
பழனிசாமி, கலைவாணன், மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *