காரைக்கால், செப்.10-காரைக்காலில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்து கள் தொடர்பான ஒருங்கிணைந்த தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள், அமலாக்க நடவடிக்கைகள், விபத்துகளுக்கு பின்னர் வழங்கப்படும் அவசர மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், காரைக்கால் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடை பெறும் விபத்து அபாயப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் தேவையான சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
_
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்