தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலக் குழு அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்று தமிழக அரசாங்கம் விரைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், நிறைவேற்றும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.