கோவையில் TNCD Groups மற்றும் Dia Diamonds பெருமையுடன் வழங்கிய “தி கோல்டன் டிக்கெட்” பிக்கிள்பால் போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 வீரர்கள், 20 அணிகளாக பங்கேற்று தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் பல அணிகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றனர்.
இதில், கோயம்புத்தூரைச் சேர்ந்த திவ்யா நாகேஸ்வரன் உரிமையாளராகவும், கேப்டன் அஸ்வின் தலைமையிலான Rally Royals அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருப்பூரைச் சேர்ந்த சிவபிரசாத் உரிமையாளராக உள்ள Tirupur Titans அணி இரண்டாம் பரிசை வென்றது.
இந்த நிகழ்ச்சியில் TNCD குழுவினர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பிரதீப், இந்தியாவின் முன்னணி எழுத்தாளரும் MARK-FLY நிறுவனத்தின் நிறுவனர் அக்ஷய் ஷர்மா, திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஆதவ்வா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர்.
மேலும், வெற்றி பெற்ற Rally Royals மற்றும் Tirupur Titans அணிகள், Tamil Nadu Pickleball Now சார்பில் நடைபெறவுள்ள Inter-State Championship போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், போட்டியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த TNCD Groups மற்றும் Dia Diamonds நிறுவனங்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன், வெற்றி பெற்ற அணிகளுக்கும் வீரர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.