கோவை மாவட்ட வருவாய் கல்வி மாவட்ட குறுமைய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டம், மதுக்கரை குறுமையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக கோலாகலமாக துவங்கியது.
இரண்டு நாட்கள் கோவை நேரு ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா பள்ளியின் தாளாளர் நித்யா ராஜ் குமார் தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலைவாணி கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..
விழாவில்,கலைவாணி மாடல் பள்ளியின் முதல்வர் மீனாட்சி அனைவரையும் வரவேற்று பேசினார்
முன்னதாக தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டு விளையாட்டு வீரர்,வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றதுஇரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு வயது மற்றும் பிரிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில்,தொடர் ஓட்டம்,ஓட்டப்பந்தயம்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல் ,நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றனபோட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் இம்மானுவேல், நாகமாணிக்கம் மேலாளர் வினோத் ஆகியோர் செய்திருந்தனர்..