தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட 242 பேர் கைது
தேனி மாவட்டம் தேனி பழைய பஸ் நிலையம் நேரு சிலை அருகே தமிழக முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒ பன்னீர்செல்வம் தலைமையில் எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 242 பேரை போலீசார் கைது செய்தனர்
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையினர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் கைது செய்தனர்.
இதனை கண்டித்து தமிழக முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒ பன்னீர்செல்வம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 242 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்
சாலை மறியல் ஈடுபட்ட திமுகவினர் கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் கையாலாகாத தவெக அரசை கண்டிக்கிறோம் அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டோம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியலால் தேனி மதுரை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது