ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காய்கறி விதை பாக்கெட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கம்பம் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், வீட்டு பண்ணைகளில் காய்கறி சாகுபடி மேற்கொள்வதன் அவசியம் மற்றும் காய்கறி விதைகளை முறையாக நடவு செய்து பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும், விவசாயிகளுக்கும் விரிவாக விளக்கமளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும், விவசாயிகளுக்கும் வீட்டு பண்ணைகளில் பயிரிடுவதற்கான காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட்டுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாயிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் ஊரக நிர்வாகிகள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *