மன்னார்குடி., ஆக.,04
தஞ்சாவூரில் நேற்று தமிழக விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசி உள்ளார்.
இதனை கண்டித்து தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு மாவட்ட கழக செயலாளர் UVM.ராஜராஜன் தலைமையில் தமிழக முதல்வர் C.ஜோசப் விஜயை பற்றி அவதூறாக பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர கழக செயளார்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.