மன்னார்குடி., ஆக.04

முன்னாள் துணை முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர் மீது அவதூறு பரப்பி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது இதனை கண்டித்து திமுகவினர், விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காமராஜர் பேருந்து நிலையத்தில் திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பொய் வழக்கு பதிவு செய்த தமிழ்நாடு காவல்துறை கண்டித்தும் கண்டனம் முழக்கம் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *