தியாகி என்.ஜி.ராம சாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் 30ம் ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டு விழா


பி. எஸ். ஜி.சர்வஜனா பள்ளியில் மூன்று நாட்கள் நடந்தது. 50க்கும் மேற்பட்ட அணி கள் பங்கேற்றன.14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான கோ-கோ போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி, சுகுணா சர்வதேச பள்ளி, பிருந்தாவன் வித்யாலயா பள்ளி, பி. எஸ். ஜி. சர்வஜனா பள்ளி ஆகியன முதல் நான்கு இடங்களை பிடித்தன.17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் கலைவாணி பள்ளி, தொண்டாமுத்தூர் அரசு பள்ளி, சாய் வித்யா நிகேதன், பி.எஸ்.ஜி. சர்வ ஜன பள்ளி ஆகியன முதல் நான்கு இடங்களை வென்றன.14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி யில் பி.எஸ்.ஜி.சர்வ ஜனா, நேஷனல் மாடல், பீப்பள், கே.கே.நாயுடு பள்ளி அணிகள் முதல் நான்கு இடங்களை தட்டிசென்றன.வெற்றி பெற்ற அணி சர்வஜனா மேல்நிலைப்களுக்கு பி.எஸ்.ஜி. பள்ளி செயலாளர் நாராயணசாமி, தியாகி என். ஜி.ஆர்.பள்ளி முன்னாள் மாணவர் சங்க முன்னாள் தலைவர் சீதாபதி உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *