உத்தமபாளையம் தாலுகாவில் உத்தமபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட கலெக்டர்

தமிழக முதல்வர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா உத்தமபுரம் திட்டப் பகுதியில் ரூபாய் 39.14. கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 336 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அடுக்குமாடி குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் உடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா செயல் பொறியாளர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கதிரேசன் வருவாய் கோட்டாட்சியர் உத்தமபாளையம் சையது முகைதீன் இப்ராஹிம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சந்திரகுமார் உதவி செயற்பொறியாளர் வளர்மதி உத்தமபாளையம் தாசில்தார் பால சண்முகம் உதவிப் பொறியாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *