​கோவை:
​கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் வந்தடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அலைமோதி வருகிறது. “நல்லவர் ஆட்சியில் நல்லதே நடக்கும்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இயற்கையே மழையாகப் பொழிந்து தமிழகத்திற்குரிய நீரைக் கொண்டு சேர்த்துள்ளதை ஒட்டுமொத்த மாநிலமும் வரவேற்று வருகிறது.


​இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நெகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கோவையைச் சேர்ந்த பிரபல நுண் கலைஞர் குனியமுத்தூர் UMT. ராஜா அவர்கள், தனது தனித்துவமான கலைப் படைப்பின் மூலம் தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.


​காவிரி நீர் தமிழகத்திற்கு வந்தடைந்ததை போற்றும் விதமாக, “காவிரி நீர் கண்ட தளபதி” என்ற தலைப்பில், வெறும் தண்ணீர் துளிகளை மட்டுமே பயன்படுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் திருவுருவப் படத்தை மிகத் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.


​இயற்கையின் கொடையையும், ஆட்சியில் கிடைத்துள்ள நீரையும் ஒருங்கிணைத்து, தண்ணீர் துளிகளிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நுட்பமான ஓவியம் காண்போரைக் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோவை நுண் கலைஞர் UMT. ராஜாவின் இந்த வினோதமான மற்றும் சுவாரஸ்யமான படைப்பு, தற்போது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *