தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றம், தாளநத்தம் கிராமத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களை அறிவித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளராக இர்ஃபான் பாஷா, ஆவண மையம் மாவட்ட துணை அமைப்பாளராக ஹரிபிரபதாஸ் உள்ளிட்ட தோழர்களை மாவட்ட நிர்வாகியாக தேர்வு செய்யப்பட்டு பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தாளநத்தம் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிணைந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தோழர்கள் அனைவரும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் வருகின்ற 17-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்
நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு செல்வது குறித்து ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதில் பேருந்து வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாயவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்