தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது கல்லூரி முதல்வர் முனைவர் பழனிவேல் அனைவரையும் வரவேற்று பேசி ஆண்டு அறிக்கை வாசித்தார்
மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் சேர்மன் வழக்கறிஞர் எம் ஆர் ரகுநாதன் இயக்குனர் முனைவர் ஆர் ராஜமாணிக்கம் நிர்வாக இயக்குனர் முனைவர் செந்தில்குமரன் துணைதலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளாக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்
CSIR- CS 10 நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ACSIR நிறுவனத்தின் பேராசிரியருமான பத்மஜோதி முனைவர் ஜி எஸ் அய்யப்பன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ராஜமூர்த்தி பேராசிரியர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்