நாகப்பட்டினம்,செப்.21-
திருமருகல் வட்டாரத்தில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

– நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத் திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு ஹெக்டேருக்கு ரூ.29 ஆயிரம் மானியம் வீதம் 2 ஹெக்டேர் எண்ணெய் பனை பரப்பு விரிவாக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 143 எண்ணெய் பனை நடவுச் செடிகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். முதலாம் ஆண்டு ஊடுபயிர் சாகுபடிக்காக ரூ.5,250 வீதம் 50 சதவீத மானியமும், பராமரிப்பு செலவினமாக ரூ.5,250 வீதம் 50 சதவீத மானியமும், முதல் 4 ஆண்டுகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். எண்ணெய் பனைக்கு மத்திய மற்றும் மாநில அரசகளால் குறைந்தபட்ச ஆதாவு விலையாக ரூ.15 ஆயிரத்து 488 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் உற்பத்திக்கான முக்கியமான பணப்பயிர். அதிக எண்ணெய் உற்பத்தித் திறன். வேலை ஆட்கள் குறைவு. குறைவான சாகுபடி செலவு. விவசாயிகளுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் வரை நிலையான வருமானம் தரும். முதல் 4 ஆண்டுகளில் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதனை விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் கொண்டு விண்ணப்பித்து இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள அனைத்து விவசாயிகளும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *