நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட நாரைக்கிணறு பகுதியில் நிலம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டிருந்த சென்னை கோட்டை நோக்கிய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சௌந்தராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாரைக்கிணறு பகுதியில் உள்ள அன்சர்வே நிலங்கள் 2000-54-ஆம் ஆண்டு அரசு அறிவிப்பின் மூலம் காக்குலமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த அறிவிப்பின்படி இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே விவசாயம் செய்து வருவதாகவும், தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைத்தாலும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றளவும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகத்திலேயே அகதிகளைப் போல வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறினார். விரைவில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மக்களைச் சந்தித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொகுதி அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சரும் சனிக்கிழமை நேரில் வந்து மக்களைச் சந்தித்து ஆய்வு செய்து, கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களது அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த உறுதிமொழிகளை ஏற்று, தற்போது சென்னை நோக்கிய காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக அகதிகளைப் போல் வாழும் மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *