ஏனங்குடி அரசு பள்ளி பசுமைத் தோட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குனர் ஆய்வு
நாகப்பட்டினம்,ஆக.6-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக “பசுமைத் தோட்டம்” அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமை தோட்டத்தினை தோட்டக்கலைத் துணை இயக்குநர் (பொ) திலீப், தோட்டக்கலை உதவி இயக்குநர் முஹம்மது சாதிக் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் கீரைகள் வகைகளை பள்ளியில் சத்துணவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார், வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.