போடி, ஆக. 7: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணக்கரைப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்களை வரும் 30.08.2026-க்குள் நிலுவையின்றி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை உரிமைக் கட்டணம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை உள்ளிட்ட அனைத்து வரி மற்றும் கட்டணங்களும் அடங்கும். மேற்கண்ட தொகைகளை அணக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செலுத்தலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தத் தவறும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும். மேலும், ஊராட்சி சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. வைத்திநாதன் உத்தரவின்படியும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்கத்தம்மாள் மற்றும் ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோரின் அறிவுரையின்படியும், அணக்கரைப்பட்டி ஊராட்சி செயலர் பொட்டு முருகேசன் தெரிவித்துள்ளார்.