கும்பகோணம் ஹெரிடேஜ் லயன்ஸ் சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகாரபூர்வ வருகை நிகழ்ச்சி நேற்று ஏ ஆர் ஆர் லைலா சுப்பிரமணியம் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆளுநர் லயன் விஜயலட்சுமி சண்முகவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்கத்தின் அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முன்னாள் ஆளுநர் லயன் சண்முகவேல் கலந்துகொண்டு, கண்தான விழிப்புணர்வு மற்றும் இளம்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான பிரசுரங்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார் இதில் மாவட்ட அவைச்செயலாளர் லயன் சசிதரன், அவைப்பொருளாளர் லயன் எழிலரசி ரவி, நிர்வாக அலுவலர் லயன் ராஜேந்திரன், மாவட்ட கூடுதல் அவைச்செயலாளர் லயன் சங்கரலட்சுமி, மண்டல தலைவர் லயன் சுரேஷ், வட்டார தலைவர் லயன் திரவியராஜ், முதன்மை கொடையாளர் லயன் கோபால்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கும்பகோணம் பகுதியில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்களின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த காணொளி திரையிடப்பட்டது.
பல்வேறு நலத்திட்ட உதவிகள் இந்திய தபால் துறையில் கும்பகோணத்தில் பணிபுரியும் திருமதி தனலட்சுமிக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் மரக்கன்றுகள், குக்கர், கிரைண்டர், மிக்சி ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. ஒரு மாணவிக்கு ரூ.25,000 கல்வி உதவித்தொகையும், சினேகம் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.
இறுதியில் சங்க பொருளாளர் லயன் ஆனந்தகுமார் நன்றி கூறினார்