பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபட்ட பாபநாசம் உதவி காவல் கண்காணிப்பாளர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்ட காவல்துறை மற்றும் பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது..

கபிஸ்தலம் பாலக்கரையில் இருந்து துவங்கிய மாரத்தான் ஓட்டத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டு பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபட்டார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..

இதில் வரும் பாபநாசம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவன் லித்திஸ் சுட்டெரிக்கும் வெயிலில் கால்களில் செருப்பு இல்லாமல் இரண்டு கிலோமீட்டர் ஓடிவந்து முதல் பரிசை வென்றெடுத்தார்..

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் ஓடி வந்து சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *