எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் கண்தான விழிப்புணர்வு பேரணி மற்றும் ரத்ததான முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி லயன் சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது சீர்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய பேரணியை தாசில்தார் ராஜரத்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

தொடர்ந்து பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் நர்சிங் கல்லூரி மாணவிகள் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக முழக்கங்கள் எழுப்பி பழைய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றடைந்தனர்

இதில் லயன் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல பங்கேற்றனர் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *