தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை முன்னிட்டு தேனி மாவட்டம் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே எஸ் பிரவீன் கெளதம் ஆகியோர் முன்னிலையில் சுமார் 2000 ககும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப . ராஜகுமார் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் வீராச்சாமி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கலைக் கதிரவன் மகேஷ் துணைக் காவல் கண்காணிப்பாளர் பெரியகுளம் நல்லு வருவாய் கோட்டாட்சியர் பெரியகுளம் கவிதா உதவி ஆணையர் கலால் பஞ்சாபகேசன் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லட்சுமி கல்லூரி முதல்வர் சித்ரா மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *