காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், நாட்டரசன்பட்டு ஊராட்சியில் 10.08.2026 காலை 11.30 மணியளவில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் நாட்டரசன்பட்டு ஊராட்சித் தலைவர் வசந்தி சாம்பசிவம், துணைத் தலைவர் மஞ்சுளா கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முரளி, தனசேகர், திருலோகநாதன், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு கிராமத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

இக்கூட்டத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு விஜிலென்ஸ் அவர்னஸ் கவுன்சில் சார்பில் தேசிய தலைவர் எ. பிரபு ராஜா, தேசிய மகளிர் அணி தலைவி புவன்ய ஸ்ரீ, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி தலைவி துர்கா, ரீட்டா, ஷகிலா, ஷீபா பிரியா, சாமுண்டீஸ்வரி, பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, ஊராட்சியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *