தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டாரம் நந்தவனம் பாளையம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், உள் மாவட்ட அளவிலான பயிற்சியின் ஒரு பகுதியாக “ஈரப்பதம் பாதுகாத்தல் மற்றும் வறட்சி மேலாண்மை நுட்பங்கள்” என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கண்ணன் கலந்து கொண்டு, வறட்சியைத் தாங்கி பயிர்கள் வளர்வதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
வேளாண்மை உதவி இயக்குநர். பொம்ம ராஜு, வேளாண்மைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் கவிதா, கிரிதரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சரவணகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.