தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் பொது விருந்து-அமைச்சர் சரத்குமார் பங்கேற்பு
தாம்பரம், ஆக. 16 :
80வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடைபெற்றது.இதில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் டி.சரத்குமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவு வழங்கி பின்னர் அவரும் பொது விருந்தில் பொது மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
உடன் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.