கோவை உக்கடம் அருகில் உள்ள சூப்பர் அவென்யூ வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக,நாட்டின் 80 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
சங்கத்தின் துணக தலைவர் நாசர் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் அபு தாகீர் முன்னிலை வகித்தார்..
சமய நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சூப்பர் அவென்யூ வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அப்துல் காதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்..
தொடர்ந்து பொருளாளர் காஜா உசேன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்..
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து ஒருவருக்கொருவர் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சமய நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குடியிருப்போர் திரளாக கலந்து கொண்டு நாட்டின் ஒற்றுமையை போற்றினர்.
விழாவில் ,
சையது இப்ராஹிம், பைரோஸ் கான், அசாருதீன், ரபீக், அப்துல் நாசர், முகம்மது ஹக்கீம், அப்துல் கபூர், அசாருதீன், நவ்ஷாத் அலி, ரோஸ் மீரான், கேட்டரிங் சித்திக் உட்பட நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
இதே போல உக்கடம் நியூ மார்க்கெட் வளாகத்தில் 80 வது சுதந்திர தின விழா உக்கடம் நியூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது..
இதில் கவுரவ தலைவர் உசேன் மற்றும் நிர்வாகிகள் இணைந்து தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர்..
விழாவில்,செயலாளர் ஜெய்னூலாப்தீன் பொருளாளர் அனீபா,மற்றும் நிர்வாகிகள் அக்பர் அலி,,அசன்,அப்துல் ஹக்கீம்,பைசல்,அப்பாஸ் அலி யாசீர் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்…