80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாதவரம் மாநகராட்சி 3 ன் சார்பில் சுதந்திர தின கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் ஹார்ட்டின் ரொசாரியோ, பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் செயற் பொறியாளர்கள் , அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.