ஓசூர் ஆகஸ்ட் 15

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள கிரீன் பிளானட் ஆம்பியர் மின்சார இருசக்கர வாகன ஷோரூம் அருகில் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகரக் கிளையின் சார்பாக சிறப்புடன் நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் மாநகர தலைவர் L.G.சோலைராஜ் தலைமை வகித்தார்,

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநகரப் பொருளாளர் K.குருசாமி, இளைஞர் அணி பொறுப்பாளர் மை காபி G.வெங்கடேஷ், ஜெராக்ஸ் சந்துரு, மஞ்சு, ராஜேஷ், கார்த்திக், பாலாஜி, பழனி, D பார்த்திபன், லோகு, பிரவீன் குமார், சஞ்சய், மீனாட்சி நகர் கோவிந்தராஜ், ஷீஜா உமாசங்கர், செல்வி சந்துரு, மின்சார இரு சக்கர வாகன உரிமையாளர் நவீன், நாகேஷ், மாதேஷ், விஜயன், ஜெயன், சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில இணை செயலாளர் G.B.மார்க்ஸ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *