பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எண்டப்புளி ஊராட்சியில் நமது இந்திய திருநாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார்
இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மக்கள் திட்டமிடல் இயக்கம் தொழிலாளர் வரவு செலவு திட்டம் நலிவு நிலை குறைப்பு நிதி தூய்மை பாரத இயக்கம் ஊரகம் ஜல் ஜீவன் திட்டம் சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரம் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
இந்த கூட்டத்தின் பார்வையாளராக
பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிராஜ் உள்பட ஊராட்சி அலுவலர்கள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்