கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 80வது சுதந்திர தினவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் முதல்வர் V.பழனியப்பன் தலைமையேற்று வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

பள்ளியின் தாளாளர் K.பாண்டியன் தலைமை தாங்கினார்.Dr. A. கோவிந்தராஜ், Retd. Principal, Writer and Psychological Counsellor)இவ்விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் இன்றைய இளைஞர்கள் கல்வியோடு ஒழுக்கத்தையும், தேசப்பற்றையும் தங்களது வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், தேசப்பற்றை வளர்க்கும் நாடகங்கள், நடனங்கள் மற்றும் பாடல்கள் இவ்விழாவில் நடைபெற்றன.

இருதியாக பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் நளினி பிரியா நன்றி கூறினார்.இவ்விழாவில் ஆசிரிய, ஆசிரியைகளும், பள்ளி மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *