தூத்துக்குடி மீள விட்டான் செல்லும் பகுதியில் புதியதாக அரசு மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒரு சில தினங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்று தெரிய வருகிறது..
இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தெரிய வந்தவுடன் டாஸ்மார்க் கடை இங்கு அமைக்க கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர். தூத்துக்குடி வட்டாட்சியர். கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு டாஸ்மார்க் கடை அமைக்க வேண்டாம் என மனு அளித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி டாஸ்மாக் கடைய அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இதனை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று போது புதியதாக திறக்கப்பட உள்ள டாஸ்மார்க் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்பகுதி இப்போது மக்கள் கூறுகையில் தமிழக முதலமைச்சர் விஜய் இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வேலைக்கு சென்று வருகின்றனர்
இரவு நேரங்களில் கூட பெண்கள் வேலைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கின்றனர் அது போல புதியதாக திறக்கப்பட உள்ள டாஸ்மார்க் கடை அருகிலேயே பள்ளிக்கூடங்கள். கோவில். தேவாலயம் உள்ளிட்டவைகள் உள்ளன
இதனால் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் நாங்கள் மக்கள் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான விஜய்க்கு நாங்கள் வாக்களித்தோம் என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது அதை மீறி திறக்க அனுமதித்தால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் ஆகையால் உடனடியாக தமிழக அரசு மீள விட்டான் பகுதியில் புதியதாக டாஸ்மார்க் கடை திறக்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.