உளுந்தூர்பேட்டையில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 5 வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர்.

மாவட்ட செயலாளர் கீழ்.கா. அன்புச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த அணிவகுப்புக்கு, அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் கலங்கரை காசி, துணைச் செயலாளர்கள் ம. நரேஷ், கேசவன், ராஜி, வெங்கடேசன், ம. தமிழரசன் மற்றும் எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலாளர் சுரேந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, 5 வாகனங்களில் உளுந்தூர்பேட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *