மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
தென்காசி ஆகஸ்ட் 17-
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான கல்லூரியான ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி உள்ளது இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் ஒழுக்கம் சிறப்பான கல்வி ஆகியவற்றிற்கு நற்பெயர் பெற்ற கல்லூரி ஆகும் இந்த கல்லூரியில் 1973 To1976 வருடங்களில் பயின்ற மாணவர்கள் தங்களை whatsapp செயலி மூலம் ஒன்றிணைத்து இந்திய சுதந்திர தினத்தின் 80 ஆவது ஆண்டு தினத்தில் கல்லூரியில் சந்தித்து தங்களது நட்புகளை கண்டு மகிழ்ந்தனர்
இதில் சுமார் 20 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர் இவர்களில் ஏறத்தாழ 70 வயதை கடந்தாலும் கல்லூரி மாணவர்களை கண்ட பொழுது வயதை மறந்து மீண்டும் கல்லூரி பருவத்திற்கு திரும்பியதாகவும் தங்களது பயின்ற கல்லூரியில் தான் அமர்ந்து இருந்த இருக்கையில் அமர்ந்த போது மகிழ்ச்சியும் அன்று என்ன மனநிலையில் இருந்தோமோ அதே நிகழ்வு அதே பூரிப் போடு இன்னும் திகழ்கிறோம் என்று கூறினார்
இனி வரும் ஒவ்வொரு வருடமும் இதே போல் சந்திப்பு நிகழும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது . இந்த நிகழ்விற்காக பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது