கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம், வள்ளலார் கல்வி அற நிலையங்கள் , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் கீழக்கொட்டையூர் வள்ளலார் தொடக்கப்பள்ளியில் நடந்தது..
முகாமை சங்கத் தலைவர் லயன் கருணாகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக தவெக அம்மாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் சசி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மண்டலம், வட்டாரம் மற்றும் மாவட்ட தலைவர்களான லயன் மாறன்,லயன் மோகன், லயன் ராமதுரை லயன் பாஸ்கர் லயன் சீனிவாசன் லயன் செந்தில் குமரன் லயன் வேல்முருகன் லயன் இராமதாஸ் , சாசன தலைவர் இரவி,செயலாளர் லயன் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் லயன் ஏசுராஜ் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்.
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 64 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அழைத்து செல்லப்பட்டனர்.
அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து 40 நபர்களுக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை சாசனத் தலைவர் ரவி செய்திருந்தார்.
முகாமிற்கு அச்சாணியாக உறுதுணையாக நின்ற முரளிதரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி தலைவர், செயலாளர் உள்ளிட்ட கல்விக் குடும்பத்தினர் அனைவருக்கும்
வள்ளலார் அரிமா சங்கத்தின் சார்பில் மனம் நிறைந்த நன்றியும், பாராட்டும், வாழ்த்துக்களும் உரித்தாக்குகின்றோம்.