தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சி. நடேசன் தலைமையில் சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சி. நடேசன்பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் நமது இந்திய திருநாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்
இந்த நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா தேவி தலைமை இளநிலை உதவியாளர் ஓம் முருகன் உள்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.