தென்காசி அருகே உள்ள அச்சம்பட்டியில் தென்னை மரங்களில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மகசூல் மேம்பாடு குறித்து (வேர் வழி ஊட்டச்சத்து அளித்தல்) பயிற்சி முகாம் நடந்தது.


காருண்யா பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள் சார்பில் கல்வி சார்ந்த செயல் விளக்கத்தின் பகுதியாக தென்னை மரங்களில் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் மகசூல் மேம்பாடு குறித்து (வேர் வழி ஊட்டச்சத்து அளித்தல்) பயிற்சி முகாம் நடந்தது,
முகாமிற்கு மூத்த விவசாயி மாரியப்பன் தலைமை வகித்தார் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கணேஷ், சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர் காருண்யா கல்லூரி மாணவிகள் பு.கேத்தரின், ஃபிளமிதா, யோகேஸ்வரி, இவாஞ்சலின், ஹரிணி, ஜெமிமா, ஷேரன் தலைமையிலான குழுவினர் விவசாயிகளுக்கு தென்னை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து சுமார் 1 முதல் 1.5 மீட்டர் தொலைவில் பென்சில் அளவு தடிமனுடைய ஆரோக்கியமான வேரைத் தேர்வு செய்து, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கத்தியின் மூலம் வேர் நுனியை வெட்டி அதில் ஒரு லிட்டர் நீரில் ஜி5 இலைத் தெளிப்பு கரைசல் 2மில்லி கலந்து ஊட்டச்சத்து கரைசல் தயாரிக்கப்பட்டு சுத்தமான பாலித்தீன் பையில் ஊற்றப்பட்டு, வெட்டப்பட்ட வேர் நுனி அந்தக் கரைசலில் மூழ்கும் வகையில் பைக்குள் செலுத்தப்பட்டது.


பின்னர் கரைசல் வெளியேறாத வகையில் வேரைச் சுற்றி பாலித்தீன் பை இறுக்கமாகக் கட்டப்பட்டு வேர் வழியாக கரைசல் முழுமையாக உறிஞ்சப்படும் வரை பையை அசைக்காமல் வைத்திருக்கும் முறையும் இதன்படி ஊட்டச்சத்துகளை நேரடியாக வேரின் வழியாகச் செலுத்துவதால், தென்னை மரம் அவற்றை திறம்பட எடுத்துக் கொண்டு மரத்தின் வீரியம், வளர்ச்சி மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியம் மேம்படுவதுடன், பூப்பிடித்தல், காய்ப்பிடித்தல் மற்றும் தேங்காய் வளர்ச்சி சிறப்பாக நடைபெற உதவும் என மாணவர்கள் விளக்கினர்.
அத்துடன் மண்ணில் ஊட்டச்சத்து அளிப்பதைக் காட்டிலும் ஊட்டச்சத்து இழப்பைக் குறைக்க இம்முறை உதவுவதுடன், வறட்சி காலங்களில் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வது குறையும் நிலையில் இம்முறை தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எடுத்துரைக்கப்பட்டது.


இதனால் தென்னை மரங்களில் ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் வேர் வழி ஊட்டச்சத்து அளித்தல் முறையின் நடைமுறை பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. முகாமில் 30க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *