போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போ.அணைக்கரைப்பட்டி ஊராட்சியில், இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அணைக்கரைப்பட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஊராட்சி செயலர் பொட்டு முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.