தஞ்சாவூர், ஆக- 19. தஞ்சாவூர் தமிழ் தேசியக் கட்சி தலைவர் ரெ.பா.தமிழ் நேசன் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
தஞ்சாவூர் காவிரி வடிநிலக் கோட்டத்தில் நீண்டகாலமாக ஒரே நிர்வாகப் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட பணிகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் கல்லணை ஷட்டர் பராமரிப்பு – பணிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். காவிரி வடிநிலக் கோட்டத்தின் கடந்தகால நிதி வரவு-செலவு கணக்குகள், ஒப்பந்தப் பணிகளின் தொழில்நுட்ப மற்றும் நிதி பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, விசாரிக்க வேண்டும்.
அரசின் விதிப்படி அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் துறை சார் அலுவலகத்தில் அதிகப்படியாக மூன்று வருடங்கள் மட்டும் பணி புரியலாம் என்ற நிலை உள்ளபோது நீர்வளத்துறை கீழ் வரும் தஞ்சாவூர் காவிரி வடிநில கோட்டத்தில் JE, AEE -ஆக 24 வருடங்கள் ஒரே இடத்தில் பணியை தொடரும் உதவி செயற்பொறியாளர், இவர் மட்டும் 20 வருடங்களுக்கு மேலாக நீர்வளத் துறையில் பணிபுரிவது விவசாய பெருங்குடி மக்களுக்கும் மிகுந்த சந்தேகத்தை அளிக்கிறது
அதன் விளைவாகவே மாவட்ட ஆட்சியரின் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் கடைமடை பகுதியில் சார்ந்த விவசாயிகள் தங்களுக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை நீர்வழி வாய்கால்கள் முறையாக தூர்வாரப்படாமலும், மதகுகள் பராமரிப்பும் இல்லாத காரணத்தினாலும் நீர் பற்றாக்குறை காரணமாக தங்களால் விவசாயம் செய்ய இயலத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் பல நேரங்களில் குறைகளை கூறி வருகிறார்.
குற்றச்சாட்டுகள் உண்மை என விசாரணையில் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரியவந்தால், விளக்கத்தையும் அதுகுறித்த உண்மையான பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
காவிரி படுகையில் ஒதுக்கப்படும் அரசு நிதி முறையாக மக்களின் நலனுக்காகவும், பாசன வசதிகளுக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ரெ.பா.தமிழ் நேசன் தெரிவித்துள்ளார்.