தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் 4-வது தெற்கு வீதியில் வசித்து வருபவர் செல்வகுமார். இவரது மனைவி ரம்யா. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதில், வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து அடியோடு நாசமாயின

மேலும், வீட்டில் வைத்திருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களும் தீயில் கருகி பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார்.

அப்போது தீ விபத்தில் பாதிக்கப்பட்ட செல்வகுமார்–ரம்யா தம்பதியினரை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன்,தீ விபத்து ஏற்பட்ட விதம் மற்றும் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்கினார்.

வீட்டு உபயோகப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும், நிதியுதவியையும் வழங்கி, தொடர்ந்து தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்

இதனைத் தொடர்ந்து கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு சென்ற எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, தீ விபத்து ஏற்பட்டபோது விரைந்து செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் தேனி தென்மேற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் அய்யர் ராம்குமார், கம்பம் நகர தெற்கு செயலாளர் சதீஷ், பொருளாளர் அபு, மாவட்ட இளைஞரணி அருண்குமார்,கம்பம் நகர பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *