கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, ஆனைமலை வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் வால்பாயிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் முன்னாள் சபாநாயகரும் அதிமுகவின் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் அப்போது முன்னாள் முதல்வர்கள் டாக்டர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு அவர்களின் வழியில் கழகத்தை வழி நடத்தி வரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் ஆட்சியில் பொறுப்பேற்ற அன்றே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளான அம்மா அரசின் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி அதிமுக வின் ஆட்சியில் மக்களுக்கு முறையாக வழங்கப்பட்டது

அதற்கு பின்னர் வந்த திமுக ஆட்சியிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை தற்போது ஏதோ இணையதளத்தில் செய்த மாயா ஜாலத்தால் ஆட்சிக்கு வந்த தவெக அரசு எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை கோடி கோடியாக பணம் கொடுத்து வாரச்சந்தையில் விலைக்கு வாங்கி எம்.எல்.ஏக்ககளின் பதவிகளை ராஜநாமம் செய்ய வைத்து மக்களின் வாக்குரிமையை அவமானப்படுத்தியது தான் தவெக அரசின் 100 நாள் சாதனை என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார்

மேலும் ஏதோ ஒரு சூழ்நிலை ஆட்சிக்கு வரமுடியவில்லை ஆனாலும் மீண்டும் அம்மாவின் அரசு அமையும் ஆகவே அதிமுகவின் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை விடுத்து அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மீட்டெடுத்து மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி யாரின் ஆட்சி அமைய அனைவரும் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

முன்னதாக புதிதாக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர துணைச்செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன்,பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சலாவுதீன்அமீது, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆர்.ஆர்.பெருமாள்,பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நரசப்பன், ஐ.டி.விங்க் செயலாளர் சண்முகம், இளைஞரணி நகரச்செயலாளர் சசிகுமார்,வார்டு செயலாளர்கள் எம்.ஆர்.எஸ்.மோகன்,எஸ்.கே.எஸ். பாலு, அம்மா பேரவை நகர இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், இணைச்செயலாளர் கருமலை விமலா, , நகர,அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க கிளைச் செயலாளர் செந்தூர்பாண்டியன், தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட, நகர, சார்பு அணி, மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்


வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *